மணிரத்னத்துடன் இணைந்து திரைக்கதை எழுதும் இளங்கோ குமரவேல்…!

அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வந்தார் மணிரத்னம்.

தற்போது விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அமலா பால் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரையும், தெலுங்கு நடிகர் மோகன் பாபுவையும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் நட்சத்திரங்களையும் வைத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கப் போகிறார் மணிரத்னம்.

இயக்குநர் மணிரத்னத்துடன் சேர்ந்து திரைக்கதை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் இளங்கோ குமரவேல். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து தயாரிக்க லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.