துரை பாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் முன்பதிவு. ஆலயா கிரியேஷன்ஸ் சார்பில் அன்பரசன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இயக்குனர் கவுதமன் மகன் தமிழ் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.
கிராமத்து இளைஞர்கள் சிலர் நிகழ்ச்சி ஒன்றை நடத்துகின்றனர். அதில் நாயகியின் கவனத்தை ஈர்க்க இளைஞர்கள் ஆங்கிலப் பாடல் பாடுவதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்த காட்சிக்காக டாக்டர் சௌமோ கோஷல் என்பவர் எழுதியுள்ள பாடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா கம்போஸ் செய்துள்ளார்.
மலையாள படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்ச்லால் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளார்.
கார்ட்டூன் கேலரி
இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்