பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா வின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் ஹோமோ ஜோ எனும் பாவலர் மைந்தன். இவர் ஆர்.வி.உதயகுமாரிடம் கிழக்கு வாசல், சிங்காரவேலன், சின்ன கவுண்டர் போன்ற பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றி னார். முன்னதாக கற்க கசடற என்ற படத்துக் கும் வசனம் எழுதி உள்ளார்.

சில நாட்களாக உடல்நலமில்லாமல் இருந்த பாவலர் மைந்தன் நேற்று மரணம் அடைந் தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாவலர் மைந்தன் தற்போது ’நாலுபேரும் ரொம்ப நல்லவங்க’ என்ற படம் இயக்கி வந்தார். இதில் பவர் ஸ்டார் சீனிவாசன், சுரேஷ், யாசின், திருப்பதி நடித்து வந்தனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வந்தார்.