சென்னை:

ளையராஜாவின் இசையை கொண்டாடி மகிழ பிரத்யேக செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜாவின் 74வது பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்தை சேர்ந்த இசைஞானி இளையராஜாவின் பிறந்தந்ளை முன்னிட்டு, புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தற்காலை இளைஞர்கள் இளையராஜாவின் இசையை கேட்டு மகிழும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல தலைமுறையினர் கொண்டாடும் இசை அமைப்பாளராக  இளையராஜா திகழ்ந்து வருகிறார். ஆயிரக்கணக்கான  படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.

அவரது பாடல்களை திருடப்பட்டு விற்கப்படுவதை தவிர்த்து, காப்பிரைட் சட்டப்படி தனது பாடல்களை உரிமம் பெறாமல் யாரும் விற்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளார்.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் தனது பாடல்களை கேட்டு ரசிக்கும் வகையில், இன்றைய இளைஞர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் புதிய செயலி (App) ஒன்றை உருவாக்கி உள்ளார்.

இந்த செயலிக்கு ‘மேஸ்ட்ரோ மியூசிக் ஆப்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப் மூலம் மொபைல் போனில் இருந்தும் பாடல்கள் கேட்கும் வகையில் ஆன்ட்ராய்டு தளத்தில் இயங்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இசை செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து, இயக்குவதன் மூலம் இளையராஜா இசையை இலவசமாக கேட்டு மகிழலாம்.