சென்னை:

சென்னையில் நடைபெற உள்ள இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல்  ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இசை நிகழ்ச்சி குறிப்பிட்ட தேதியில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் கட்டிடம் கட்டும் வகையில், நிதி திரட்டும் பொருட்டு இளையராஜா இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறத. அதன்படி பிப். 2, 3 தேதிகளில் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிதியை தவறாக பயன்படுத்துவதாக, த தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினரா சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே  விசாரணையில்,இளையராஜா பாராட்டு விழாவை ஏன் ஒத்திவைக்க கூடாது என கேள்வி எழுப்பியதோடு, இளையராஜா நிகழ்ச்சிக்கான செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இன்று நடைபெற்ற விசாரணையின்போது, தயாரிப்பாளர் சங்கம் சார்பில்,  2016 மற்றும் 2017 செலவுக்கணக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, இந்த 2 நாள் இசை நிகழ்ச்சி மூலம்,  இளையராஜாவுக்கு ரூ.25 லட்சமும், ஒய்.எம்.சி.ஏ மைதானத்திற்கு ரூ.35 லட்சமும் கொடுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தது.

அதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள்,  2018 வரவு செலவு கணக்கையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினர். அதைத்தொடர்ந்து வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உயர்நீதி மன்றம்.