இளையராஜா ‘தலித்’ விமர்சனம்: நாளிதழ்மீது காரி துப்பிய கஸ்தூரி

சென்னை,

ளையராஜா தலித் என்பதால் அவருக்கு மத்திய அரசு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டதாக எக்ஸ்பிரஸ் நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் கிளம்பியது. இது இளையராஜா ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வளைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த நாளிதழ், இளையராஜா குறித்து செய்தி வெளியிட்டதற்காக மன்னிப்பு கோரி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில்,  இளையராஜாவின் பெயரை ஜாதி பெயருடன் பிரசுரம் செய்த நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டி அன்மீது காறி உமிழ்ந்து, கிழித்து எறிந்து  தனது எதிர்ப்பை காட்டிஉள்ளார் நடிகை கஸ்தூரி.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

அந்த வீடியோ…

 

கார்ட்டூன் கேலரி