ஐஎஸ்எல் கால்பந்து கோப்பை: சென்னை அணி சாம்பியன்

பெங்களூரு:

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் சென்னை அணி கோப்பை வென்றது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 4வது சீசன் நடந்தது. பெங்களூருவில் நடந்த இறுதி போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. போட்டியின் 9வது நிமிடத்தில் செத்ரி பெங்களூரு அணிக்கு முதல் கோல் அடித்தார்.

தொடர்ந்து சென்னை அணியின் மெய்ல்சன் 17வது நிமிடத்தில் பதிலடியாக ஒரு கோல் போட்டார். மீண்டும் 45வது நிமிடத்தில் பந்தை தலையால் முட்டி கோலாக்கினார். முதல் பாதியில் சென்னை அணி 2:-1 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து சென்னை அணியின் அகஸ்டோ 67வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பின்னர் பெங்களூரு சார்பில் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் மிகு பதிலடி தந்தார். முடிவில், சென்னை அணி 3:-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி 2015க்குப்பின் 2வது முறையாக கோப்பை வென்றது