நாமக்கல் அருகே சட்டவிரோத 6 சாய ஆலைகள் இடித்து அகற்றம்: அதிகாரிகள் அதிரடி

சேலம்:

சேலம் மாவட்டத்தில் பாயும் திருணிமுத்தாறில் சாயக்கழிவு கலப்பு  காரணமாக சுமார் 6 அடி உயரத்துக்கு நுரை பொங்கியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  நாமக்கல் ராசிபுரம் அருகே சட்டவிரோதமாக இயங்கி வந்த 6 சாய ஆலைகளை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்து நொறுக்கினர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.


சேலத்தில் கடந்த சில நாட்கள் பெய்த மழை காரணமாக  திருமணிமுத்தாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது திடீரென தண்ணீரில் நுரை பொங்கியது. இந்த நூரை காற்றில் பரவி சாலையில் விழுந்து போக்குவரத்து பிரச்சினையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட  மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்,   திருமணிமுத்தாறில் தண்ணீர் செல்வதை கண்ட  சாய ஆலை அதிபர்கள், அதில் சாயக்கழிவுகளை கலந்து விட்டுள்ளது தெரிய வந்தது. அதைத் தொர்ந்த,  சேலம் சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, கலரம்பட்டி உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோத சாய ஆலைகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், கலரம்பட்டி பகுதியில் உள்ள குமார் என்பவருக்கு சொந்தமான சாய ஆலை மற்றும், செங்கோடன் என்பவருக்கு சொந்தமான 3 சாய ஆலைகள், ஜி.கே.கரட்டூர் என்ற இடத்தில் இயங்கி வந்த பிரபு கலர்ஸ் மற்றும் காந்தி டையிங் ஆகிய 6 ஆலைகள் சாய கழிவுகளை திருமணிமுத்தாறில் கலந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, உடடினாக அலைகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ஆலையை இடித்து அகற்றும் பணிக்கான  ஆயத்தப்பணிகள் தொடங்கின. அதைத்தொடர்ந்து இன்று காலை காவல்துறையினர் உதவியுடன்  அந்த 6 சாய ஆலைகளும்  இடித்து அகற்றப்பட்டன. இதன் காரணமாக  அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள், விவசாயிகள்  வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.