ஷில்லாங்:

மேகாலயா மாநிலத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் நடைபெற்று வந்ததை தடுக்காத மேகாலயா மாநில அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்து உள்ளது.

மேகாலயா மாநிலத்தில் கிழக்கு ஜெயின்தியா மலைகளில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்க பொந்துகளில் பணியாற்றிய 13 பேர் வெள்ள நீரில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள  ஜெயின்தியா மலைகளில் எலி பொந்து அளவிலான ஓட்டைகளை தோண்டி அதன் மூலம் நிலக்கரி எடுத்து வருகின்றனர். இதற்கு அனுமதி கிடையாது. இருந்தாலும் முறைகேடாக  இது போன்ற ஆபத்து  நிறைந்த  துளைகள் மூலம் உள்ளே சென்று நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு  கடந்த 2014-ம் ஆண்டு தேசிய தீர்ப்பாயம் தடை விதித்தது.  இந்த தடையையும் மீறி  சுரங்கம் தொண்டும்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்  லைடீன் நதிக்கு அருகே உள்ள பகுதியில் சுரங்கம் தோண்டும் பணியில் 13 சுரங்க ஊழியர்கள் ஈடுபட்டனர். சுமார்  360 அடி ஆழத்தில் அவர்கள் இருந்தபோது பெய்து வந்த மழை காரணமாக  70 அடிக் அளவு நீர் தேங்கியது. இதன் காரணமாக அவர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இதுதொடர்பான புகாரின்பேரில் விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் மேகாலயா மாநில அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும், அபராத தொகையை நிலக்கரி சுரங்க நிறுவனம் & சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து இரண்டு மாதத்தில் வசூலித்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் செலுத்த வேண்டும் என்றும்  உத்தரவிட்டு உள்ளது.