சேலம்:

சேலம் மாவட்ட காவல்துறையினரும்  வனத்துறையும் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில்,  சேலம் பகுதியில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில்,துப்பாக்கி உற்பத்திக்கு தேவையான மூலபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் அருகே உள்ள வனப்பகுதிகளில் கள்ளத்துப்பாக்கி தயாரிக்கப்படுவதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து, அந்த பகுதியில், வனத்துறையினர் ரோந்து சென்றபோது, துப்பாக்கி தயாரிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன. இதையடுத்து, காவல்துறையினருடன் சேர்த்து, கல்வராயன் மலைப்பகுதியில் கூட்டு சோதனை நடத்தினார்.

அப்போது, துப்பாக்கி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் பிற உபகரணங்கள் ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அந்த இடம் மணி என்ற நபருக்கு சொந்தமானது என்றும்,  அங்கு கள்ளத்துப்பாக்கி தயாரிக்கும் பணி நடைபெற்று வந்ததாகவும் கூறப்டுகிறது. ஆனால், அங்கு யார் துப்பாக்கி தயார் செய்தது என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யவில்லை.

ஏற்கனவே கடந்த ஆண்டு  சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே  பெரியக்குட்டிமடுவு வனப் பகுதியில் வனத்தையொட்டி அமைக்கப்பட்டிருந்த குடிசைக்குள், கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலையை கண்டுபிடித்தனர். அங்கு மரம் வெட்டும் மர்ம கும்பல், கள்ளத்தனமாக நாட்டுரகத் துப்பாக்கிக்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.  அங்கிருந்து,
2 நாட்டுத் துப்பாக்கிகள், 16 ஈட்டி மரத்துப்பாக்கி கட்டைகள், உதிரி பாகங்கள் மற்றும் தயாரிப்பு உபகரணங்கள்  ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டது,.

இந்த நிலையில், தற்போது மற்றொரு பகுதியில் கள்ளத்துப்பாக்கி தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது.