கள்ளக்காதலில் பிள்ளை பெற்று கொலைகாரியாக சிறைக்குள்….

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த 38 வயது மகாலட்சுமிக்கு திருமணமாகி மூன்று மகன்கள்.. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து இரண்டு வருடங்களாக தனியே வாழ்ந்து வருகிறார். மகன்கள் மூவரும் தந்தையுடன் இருக்கின்றனர்.

இந்நிலையில் அவருடன் பணிபுரியும் ஒருவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் கர்ப்பமாகி, 12 நாட்களுக்கு முன் செங்கல்பட்டு மருத்துவமனை ஒன்றில் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. டிஸ்சார்ஜ் ஆனதும் தனது தாயை தேடிச்சென்ற அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து வீட்டின் உள்ளேயே விடாம் துரத்திவிட்டுள்ளார் இவரின் தாயார்.

மனம் வெறுத்துப்போன மகாலட்சுமி, குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ள எண்ணி ஒரு விவசாய கிணற்றில் குதித்துள்ளார். சத்தம் கேட்டு அருகிலிருந்தோர் இவர்களை காப்பாற்ற ஓடி வந்து கிணற்றில் இறங்கி போராடி தாயை மட்டுமே உயிருடன் மீட்டுள்ளனர். 12 நாள் சிசுவை சடலமாகவே மீட்க முடிந்துள்ளது.

இப்போது குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக அப்பெண்ணின் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

முதலில் செய்த தவறுக்காக கணவனும் மகன்களும் பிரிந்துபோயினர். பின்னர் முறைதவறி பெற்ற பிள்ளைக்காக பெற்றோரை பிரிய நேரிட்டது. கடைசியில் சாகலாம் என்று போனால் அதுவும் முடியாமல் பெற்ற பிள்ளையை கொன்ற கொலைகாரி பட்டத்துன் சிறைக்கு போக நேரிட்டுள்ளது மகாலட்சுமிக்கு

– லட்சுமி பிரியா