சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கு: ஆகஸ்டு 30ந் தேதி மாறன் பிரதர்ஸ்மீது குற்றச்சாட்டு பதிவு

சென்னை:

ட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் வரும் (ஆகஸ்டு) 30ந் தேதி மாறன் பிரதர்ஸ்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்எ ன சென்னை சிபிஐ நீதிமன்றம் கூறி உள்ளது. அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டுள்ள சன்டிவி நிர்வாகிகள் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்பட அனைவரும் ஆஜராகவும்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன்  மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது,  அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி,  பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பை தனது அண்ணனின் நிறுவனமன சன்டிவிக்கு  முறைகேடாக  பயன்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. அது தொடர்பான வழக்கு டில்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில்  முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் இல்லை என்று கூறி  குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து , 2017ம் ஆண்டு  மார்ச் மாதம் 14ந்தேதி வழக்கை தள்ளுபடி செய்வதாக டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை  எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாறன் பிரதர்ஸ் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்த னர்.

ஆனால், உச்சநீதி மன்றம் அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து,  மாறன் சகோதரர்கள் விசார ணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியது.

இந்த நிலையில்,  இந்த வழக்கு, சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன், கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக, ஆகஸ்ட் 17ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அறிவித்த நீதிபதி, அன்றைய தினத்தில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், அன்றைய தினம் (17ந்தி)  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவை ஒட்டி, நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பி.எஸ்.என்.எல். முன்னாள் பொது மேலாளார் பிரம்மநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கேரளாவில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள பிரம்மநாதன், இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என வாதிட்டார்.  மற்றவர்களின் தரப்பிலும், குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதை ஒத்திவைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேருக்கு எதிராக வரும் 30ம் தேதி அன்று நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், அன்றைய தினம்  குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என்றும் நீதிபதி கூறினார்.