பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு: வழக்கை எதிர்கொள்ள மாறன் சகோதரர்களுக்கு உச்சநீதி மன்றம் மீண்டும் உத்தரவு

சென்னை:

ட்டவிரோத பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு விசாரணையை எதிர் கொள்ள வேண்டும் என்று  மாறன் சகோதரர்களும்  உச்சநீதி மன்றம் மீண்டும் அறிவுறுத்திஉள்ளது.

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து,  மாறன் சகோதரர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போதே, வழக்கை மாறன் சகோதரர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்றும், சிபிஐக்கு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கெடு விதித்தும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது,

இந்த நிலையில், வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது.  பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கை மாறன் சகோதரர்கள் எதிர்கொள்ள என்றும் மீண்டும் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாறன் சகோதரர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

பிஎஸ்என்எல் தொலைபேசி முறைகேடான இணைப்பு வழக்கு

திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன்  மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்ச ராக இருந்தபோது,  அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி,  பி.எஸ்.என்.எல் இணைப்பை தனது அண்ணனின் சன்டிவி நிறுவனத்துக்கு முறைகேடாக  பயன் படுத்தியதாகவும், இதனால் அரசுக்கு 1.78 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வும் சி.பி.ஐ வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரிதத சிபிஐ நீதிமன்றம், வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி கடந்த 2017ம் ஆண்டு  மார்ச் மாதம் 14ந்தேதி வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறி மாறன் பிரதர்ஸ் உள்பட  அனைவரையும் விடுதலை செய்து

இதை  எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, குற்றம் சாட்டப் பட்டுள்ள  கலாநிதிமாறன், தயாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து பல்வேறு கட்டங்களான நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, இன்றை விசாரணையில், இந்த வழக்கு குறித்து 12 வாரங்களுக்கு சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மாறன் சகோதரர்கள் விசார ணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி, அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.