டெல்லி: பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர் சட்ட மாற்றங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள மாநில அரசுகள் முன்மொழியப்பட்ட தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் தொடர்பான கவலைகளை சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஐஎல்ஓ, பிரதமர் மோடியுடன் கருத்து கேட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் 10 மத்திய தொழிற்சங்கங்கள் அளித்த புகாரின் பேரில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த 10 யூனியன்களும் குஜராத், உத்தரப்பிரதேசம் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்ததை எதிர்த்துள்ளன. குறிப்பாக வேலைநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரம் என்பன உள்ளிட்ட பல மாற்றங்களை ஏற்கவில்லை.
இந்த சட்ட மாற்றங்கள் குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் அந்த தொழிற்சங்கங்கள் கடிதம் ஒன்றை அளித்தது. அதன்பிறகே, பிரதமர் மோடியை இந்த அமைப்பு தொடர்பு கொண்டு உள்ளது. இதையடுத்து, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைவர் 10 தொழிற்சங்களுக்கும் பதில் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் ஜெனரல், சமீபத்திய நிகழ்வுகள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளார்.  மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்புமாறு பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மே 14 அன்று காங்கிரசுடன் இணைந்த இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், இடதுசாரி இணைந்த தொழிற்சங்கங்களான அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், ஹிந்த் மஜ்தூர் சங்கம், இந்திய டேட் தொழிற்சங்கங்களின் மையம், அகில இந்திய ஐக்கிய தொழிற்சங்க மையம் ஆகியவை சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் புகார் தெரிவித்திருந்தது.