“நான் நலமாக இருக்கிறேன்!”:  ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் 

சுரேஷ் மேனன்

ளிப்பதிவாளர் சுரேஷ்மேனன் இறந்துவிட்டதாக சற்றுமுன் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இவர் நடிகை ரேவதியின் முன்னாள் கணவர்.

இவர் தமிழில் ரேவதியுடன் இணைந்து புதிய முகம் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தின் இயக்குநர் திலீபன்தான் உடல் நலக்குறைவு காரணமாக கொச்சியில் இறந்துவிட்டார்.

ஆனால் தவறுதலாக சுரேஷ்மேனன் இறந்தாதக தகவல்கள் வெளியாகிவிட்டன. சுரேஷ்மேனனை தொடர்புகொண்டு பேசியபோது, தான் நலமாக இருப்பதாக தெரிவித்த அவர், “திலீபன் எனது நல்ல நண்பர். அவரது மறைவு வேதனை அளிக்கிறது” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.