நான் அவனில்லை!: கல்யாண் ராமன் மறுப்பு

0-7

 

கடந்த 7ம் தேதி patrikai.com  இதழில், “அமித்ஷா கூட்டத்தில் காலி நாற்காலிகள்: பா.ஜ.கவினர் ஏமாற்றம்” என்ற தலைப்பில் செய்தி வெளியானது.

இதில் நாகர்கோவிலில் அமித்ஷா கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கூட்டம் இல்லாதது குறித்து குறிப்பிட்டிருந்தோம்.

இந்த செய்திக்கு கருத்து தெரிவித்தவர்களில்  கல்யாண்ராமன் என்பவர், “அடுத்து உங்க மீட்டிங் நடக்கிற இடத்துல சாதாரண நாட்டு வெடிகுண்டை வெடிக்க விட்டோம்னா  அப்புறம் பாருங்க  உங்க மீட்டிங் நடக்கிற இடத்திலெல்லாம் நம்ம பசங்க வெறியோட  வேலை செய்வாங்க  10 துலுக்கனையும் உள்ளே புடிச்சி  போட்ட மாதிரியும் இருக்கும்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

பா.ஜ.க.வைச் சேர்ந்த கல்யாண்ராமன் என்பவர் புகைப்படத்துடன் உள்ள லிங்கில் இருந்து அந்த கருத்து பதியப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பத்திரிகை டாட் காம் இதழைத் தொடர்புகொண்ட கல்யாண்ராமன், தான் அப்படி எழுதவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “குறிப்பிட்ட அந்த கருத்தை நான் எழுதவில்லை. எனது பெயரில் யாரோ விஷமிகள் பொய்யான பக்கத்தை (ஃபேக் ஐடி) உருவாக்கி, அப்படி எழுதியிருக்கிறர்கள். மற்றபடி இதற்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை”  என்று மறுப்பு தெரிவித்தார்.

அவரே மறுப்புத் தெரிவிக்கும்போது அதை வெளியிடுவதே பத்திரிகை தர்மம் என்பதால் அவரது இந்த கருத்தையும் பிரசுரிக்கிறோம்.