பெங்களூரு:

ர்நாடக சட்டமன்ற தேர்தலில் நான் கிங் மேக்கராக இருக்க மாட்டேன், கிங்காக இருப்பேன் என்றும், மக்கள் ஆதரவுடன்  ஆட்சி அமைப்பேன் என்று முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவருமான எச்.டி. குமாரசாமி கூறியுள்ளார்.

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது.அங்க அடுத்த மாதம் 12 ம் தேதி நடைபெற வுள்ளது. மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தல் குறித்து  சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்புகளின்படி, எந்த வொரு கட்சிக்கும் அருதிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றும், தொங்கு சட்டசபையே தேர்வாகும் என்றும், ஆட்சியை அமைக்க குமாரசாமியின் ஆதரவை பெற வேண்டிய நிலை முக்கிய கட்சிகளுக்கு ஏற்படும் என்று கூறப்பட்டிருந்தது.

மேலும், மாநிலம் முழுவதும் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு குறிப்பிட்ட அளவிலான ஆதரவு தொடர்ந்து வருவதால்,  கணிசமான இடங்களை குமாரசாமி கட்சி கைப்பற்றும் என்றும், அதன் காரணமாக அடுத்து ஆட்சி அமைக்கும் விஷயத்தில் குமாரசாமி கிங் மேக்கராக இருப்பார் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, நான் கிங் மேக்கராக இருக்க மாட்டேன் என்றும்,  கர்நாடக மக்களின் ஆசீர்வாதத்துடன், ஆதரவுடன் இந்த தேர்தலில் வெற்றிபெற்று ‘கிங்’ (மன்னன்) ஆவேன் என்று கூறினார்.

மேலும்,  இந்த தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும், நிலம் முழுவதும் எங்களுக்கு ஆதரவாகவே மக்கள் அலை வீசுகிறது என்றார்.

தற்போதைய நிலவரப்படி, கர்நாடகாவில், பா.ஜனதா, காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என்ற குமாரசாமி, கர்நாடகாவில்உள்ள   224 தொகுதியில் 113 தொகுதிகளை கைப்பற்றும் விதத்தில், தேர்தல் வியூகங்கள் வகுத்து வருவதாகவும், அதை நான் தொட்டுவிடுவேன் என்றும் கூறினார்.

தற்போதைய நிலவரப்படி 7, 8 இடங்கள் தான் தங்களது கட்சிக்கு பற்றாக்குறை ஏற்படும் என்றும், அதன் காரணமா தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு இல்லை,  தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்புகளை வைத்து இப்போதைக்கு எந்தத் தெளிவும் கிடைக்காது என்றார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நிலையிலும், எங்கள் கட்சியினர் மக்களுக்கு உழைத்து வருகிறார்கள் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் கர்நாடகத்தில் காங்கிரஸ், பா.ஜனதாவால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுவிட்டன. அவற்றை சரிசெய்ய சிறந்த நிர்வாகம் தேவைப்படுகிறது. அதை எங்களது கட்சி கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.