மதுரை,

மிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவை சேர்ந்த மதுரை மாநகர மேயர் ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தான் டிடிவி தினகரனின் சிலிப்பர் செல் கிடையாது என்பதை உறுதிப்படுத்தினார்.

செய்தியாளர்களை சந்தித்த ராஜன்செல்லப்பா, தற்போது டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. ஆனால், 18 எம்எல்ஏக்கள் பதவி நீக்கத்தால் ஆட்சிக்கு பாதிப்பில்லை. அனை வரும் ஒன்றிணைந்து செயல்படவே விரும்புகிறேன்.

18 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் 3 முறை அழைத்து விடுத்தும், அவரை சந்தித்து காரணம் தெரிவிக்க மறுத்து உள்ளார்கள். அதன் காரணமாகவே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

அதிமுக எம்எல்ஏக்கள் பலரின் தற்போதைய நிலைய குறித்தே நான் பேசி வருகிறேன். அதிமுகவும், அரசும் நீடித்திருக்க தேவையானதை செய்வேன் என்றார்.

மேலும் மதுரைக்கு தேவையான திட்டங்கள் குறித்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறினார்கள். ஆனால், அதற்கான அரசாணை எதுவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்று அரசு மீதும் குற்றம் சாட்டினார்.

கட்சியும், ஆட்சியும் நல்ல எண்ணத்தோடு  இருக்க வேண்டும். ஆட்சி குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை. என்றார். மேலும் அரசு குறித்து பேசுவதால், தான் டிடிவியின் சிலிப்பர் செல் கிடையாது என்றும் கூறினார்.

மேலும், தன்னுடன் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களும் பேசி வருகிறார்கள் என்றார். செய்தியாளர்களின் மு .க.அழகிரி குறித்த கேள்விக்கு, பதில் அளிக்க மறுத்து விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.