மத்தியஅமைச்சர் அனந்தகுமார் மறைவு: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல்

டில்லி:

த்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

உடல்நலம் இல்லாமல் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார் சிகிச்சை பலனின்றி மறைந்தார். அனந்தகுமாரின் உடல், குடும்பத்தினர் அஞ்சலிக்காக லால்பக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அனந்தகுமார் மறைவுக்கு  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பாஜக அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்தியஅமைச்சர் மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், அனந்தகுமார் மறைவுக்கு வருந்துவதாகவும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தனது  இரங்கலையும், அவரது ஆன்மா சமாதானமடைய பிரார்த்திப்பதாகவும், ஓம் சாந்தி என்று கூறி உள்ளார்.

டந்த நாடாளுமன்ற தேர்தலில்  பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப் பட்டவர் அனந்தகுமார். இவர் 6 முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். த்திய பாஜக அரசில் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக  பதவி வகித்து வந்தவர். அவருக்கு வயது 59.

புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த அமைச்சர், ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு  அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். தொடர்ந்து,  பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் அனந்த குமார் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.