டில்லி

ருத்துவர்கள் இறுதிச் சடங்கை நடத்த விடாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுக்கு இந்திய மருத்துவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று சென்னையில் கொரோனாவால் மரணம் அடைந்த மருத்துவர் சைமனின் உடலி புதைக்க மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்சில் எடுத்துச் சென்றனர்.  அதைப் பொதுமக்கள் சிலர் தடுத்து  ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களைக் கடுமையாகத் தாக்கி உள்ளனர்.  அதன் பிறகு காவல்துறை உதவியுடன் மருத்துவர் உடல் புதைக்கப்பட்டது.

இது குறித்து இந்திய மருத்துவ சங்கம், “சென்னையில் மருத்துவர்களுக்கு இறுதிச் சடங்கு நடத்தவிடாமல் தடுத்த நிகழ்வுக்கு இந்திய மருத்துவ சங்க தலைமையகம்  கடும் கண்டனம் தெரிவிக்கிறது.  தனது பணியைச் செய்யும் போது உயிர் இழந்த மருத்துவர்களின் ஈமச் சடங்குகளை நடக்க விடாமல் தடுத்தது மிகவும் அவமானகரமான மற்றும் நாகரீகம் அற்ற செயலாகும்.  இதில் எவ்வித உதவியும் செய்ய இயலாத நிலையில் மாநில அரசு இருந்தது.  மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது.  அரசுக்கு இதைப் போன்ற செயல்களைத் தடுக்க சக்தி இல்லை என்றால் அந்த அரசு  ஆட்சி செய்யும் உரிமையை இழக்கிறது.

இது போன்ற மிக மோசமான நிகழ்வுகளுக்கு மருத்துவர் சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவிகிற்து.  எங்கள் பொறுமை எல்லையின்றி நீட்டிக்கும் என எண்ண வேண்டாம், எங்கள் பணிகளைச் செய்ய அரசு உதவினால் தான் நாங்கள், வசவுகள், வன்முறை, துப்புவது கல்லெறிதல், சமுதாய இடங்களில் நுழைய அனுமதி மறுத்தல், வீடுகளில் வசிப்பதைத் தடுத்தல் போன்றவற்றைப் பொறுத்துக்கொள்ள முடியும்.  ஆனால் அரசு எங்களது அடிப்படை உரிமைகளை காப்பாற்ற முடியாத நிலையில் இருந்தால்  அது சரியானது. இல்லை.

தங்கள் உயிர் அபாயத்தையும் கருத்தில் கொள்ளாது மருத்துவர்கள் இறுதி வரை பணி புரிந்து வருவதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.   எந்த ஒரு நாடும் போருக்குத் தனது வீரர்களை ஆயுதம் இல்லாமல் அனுப்பாது  கோவிட் 19க்கு எதிராகப் போரிட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை பிபிஇ முழுக் கவச உடை இன்றி அரசு அனுப்புகிறது. இதனால் பல இளம் மருத்துவர்கள் உயிர் இழக்கின்றனர்.

மருத்துவர்கள் சேவையின் மதிப்பைப் புரிந்துக் கொள்ளாவிடில் மருத்துவர்கள் சுலபமாக தங்கள் வீடுகளுக்குள் அமர்ந்துக் கொள்வார்கள்.  பிறகு இந்த சமுதாயம் மிகவும் பாதிப்பு அடையும்.  மருத்துவ சேவைகள் நின்றுபோனால் மேலும் பல இழப்புக்கள் உண்டாகும். எனவே மாநில அரசு தங்கள் அதிகாரப் பூர்வ நடவடிக்கைகளை எடுத்து மருத்துவர்களுக்கு உதவ வேண்டும்.  இல்லையெனில் மருத்துவ சங்கத்தினருக்கு தங்கள் சேவைகளை நிறுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்காது  அரசின் அடுத்த நடவடிக்கைகளைப்  பொறுத்து சங்கம் இது குறித்து முடிவு எடுக்கும்.” என அறிக்கை வெளியிட்டுள்ளது.