உலக ஜூனியர் தடகள போட்டி: தங்கம் வென்றார் ஹீமா தாஸ்

லக ஜூனியர் தடகள போட்டியில் கலந்துகொண்ட இந்திய வீராங்கனை  ஹிமா தாஸ்  தங்க வென்று சாதனை படைத்திருக்கிறார். இதன் காரணமாக,  உலக தடகள ஜூனியர் பிரிவில் தங்கம் வெல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது.  நேற்று முன்திம் நடைபெற்ற  அரையிறுதி போட்டியின் ஹீமா தாஸ் 52.10 நொடி ளில் இலக்கை அடைந்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் தங்கப்பதக்கம் வென்று, சாதனை படைத்துள் ளார்.  போட்யின் தொடக்கத்தில் பின்தங்கியிருந்த இருந்த ஹிமா தாஸ் கடைசி 80 மீட்டர்களை வேகமாக ஓடிச் சென்று, பந்தய தூரத்தை 51 புள்ளி 46 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

தங்கம் பதக்கம் வென்ற ஹீமா தாஸுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவிற்கு கவுரவம் சேர்த்துள்ள ஹிமா, அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். விவசாயியின் மகளான இவர் நெல் வயலில் கால்பந்து ஆடுவதை பார்த்து உள்ளூர் பயிற்சியாளர் ஒருவர் ஓட்டப்பந்தயத்தில் கவனம் செலுத்துமாறு கூறியுள்ளார்.

இதனை ஏற்று ஓட்டப்போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்ட ஹிமாவை பயிற்சியாளர் நிபான் என்பவர் இந்திய அளவிலான போட்டிகளுக்கு தயார் படுத்தியுள்ளார்.

தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற ஒரே ஆண்டில் சர்வதேச போட்டி களில் களம் கண்டதுடன் தங்கமும் வென்று  சாதனை படைத்துள்ளார்.