ஏ320 ஏர்பஸ் என்னும் லிபிய நாட்டை சேர்ந்த மிகப்பெரிய விமானம் ஒன்றை பயங்கரவாதிகள் கடத்திவிட்டனர்.
மால்டாவிலிருந்து சபா எனும் நகருக்கு பயணித்த இந்த விமானத்தில் மர்ம நபர் ஒருவர் கையில் கிரானைடு குண்டுகளுடன் சென்றுள்ளார். திடீரென அவர், விமானியின் அறைக்குச் சென்று, விமானத்தை வெடிக்க செய்யபோவதாகவும் எனவே தான் சொல்லும் திசைக்கு திருப்பவேண்டும் மிரட்டல் விடுத்தார். அவரது ஆணைப்படி விமானம், மால்டாவை நோக்கி திருப்பப்பட்டது. அங்கு தரையிரக்கப்பட்டது.
 

விமானத்தை கடத்தியவர் ஒருவர்தானா, அல்லது குழுவாக வந்தார்களா என்பது தெரியவில்லை.
2011ஆம் ஆண்டு லிபிய அதிபராக இருந்த மும்மார் கடாபி கொல்லப்பட்டதற்கு பிறகு லிபிய நாட்டில் தொடர்ந்து வன்முறை நடைபெற்று வருகிறது. கடாபியின் ஆதரவாளர்கள்தான் விமானத்தைக் கடத்தியிருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.
கடத்தப்பட்ட விமானதிற்கு 100 மீட்டருக்கு அருகில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மால்டா விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் அனைத்து விமானங்களும் திருப்பி விடப்பட்டுள்ளன.
மால்டவின் பிரதமர் ஜோசப் மஸ்காட் இந்த விமான கடத்தல் குறித்து லிபியாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் விமான நிலையத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட விமானத்தில் பயணிகள், பணியாளர்கள் உட்பட 118 பேர் உள்ளனர். இந்த நிலையில், விமானத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக, கடத்தல் நபர் அறிவித்துள்ளார். இதனால் பதட்டமான சூழல் நிலவுகிறது.