
லண்டன்
சமீபத்தில் லண்டனில் தீவிரவாத தாக்குதல் நடத்தி மரணமடைந்த தீவிரவாதிகளுக்கு இஸ்லாமிய முறைப்படி இறுதிச்சடங்கு நடத்த இமாம் (முஸ்லிம் மத குரு) யாரும் முன் வரவில்லை. லண்டனில் இருக்கும் சுமார் 130 இமாம்களும் இறுதிச்சடங்கு செய்விக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்
இது பற்றி லண்டன் இமாம்களின் அமைப்பு தெரிவித்ததாவது
தாக்குதலினால் பாதிக்கப்ப்ட்டவர்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மனவலியை உணர்ந்தவர்கள் நாங்கள்
இந்த தாக்குதலை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது
இந்த தாக்குதல் இஸ்லாம் மதத்துக்கு எதிரானது
இது தாக்குதல் அல்ல, திட்டமிட்ட படுகொலைகள்
ரம்ஜான் மாதத்தில் கொலை நடைபெற்றுள்ளது
ரம்ஜான் மாதம் அனைவரையும் அன்பு வழியில் செல்ல வழிகாட்டும் ஒரு மாதம்
இஸ்லாம் மதம் எக்காலத்திலும் வன்முறைய பின்பற்றச் சொல்லவில்லை
இந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் இஸ்லாத்துக்கு எதிரானது

எனவே இவர்கள் முஸ்லிம்களே அல்ல.
ஆகையால் இவர்களுக்கு நாங்கள் இறுதிச்சடங்கு நடத்திக் கொடுக்க மாட்டோம்
இவ்வாறு கூறியுள்ளனர்
இந்த தாக்குதலுக்கு லண்டன் மேயர் சாதிக் கான் உட்பட பல முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
[youtube-feed feed=1]