குடிநீர் பிரச்சனையை தீர்க்க உடனடி நடவடிக்கை: எடப்பாடி பழனிச்சாமி

சென்னை:

மிழகத்தில் நிலவும் கடுமையான  தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

கோடை வெயில் தொடங்கிய நிலையில், நீர்நிலைகள் தண்ணீர் இல்லாத காரணத்தாலும், நிலத்தடி நீர் மட்டம் வெகுவதாக குறைந்து வரும் நிலையில்  தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. பல இடங்களில் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்றமும் அதிகாரிகளுக்கு குட்டு வைத்துள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி சாமி, தமிழகத்தில்  பருவ மழை சரியாக பெய்யாததாலேயே கடுமையான வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னரே இது குறித்து நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறி உள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்தர நாத் என கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, இது குறித்து தனது கவனத்துக்கு வரவில்லை என்றும் கூறினார்.