டில்லி

இன்று 2019-20 ஆன் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

இன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். இம்முறை வழக்கத்தைப் போல் ஒரு பெட்டியில் வைத்து எடுத்து வரப்படவில்லை. அதற்கு பதிலாக ஒரு சிவ்பு துணியால் மூடப்பட்டு தேசிய சின்னத்துடன் நாடாக்கள் கட்டப்பட்டு நிர்மலா எடுத்து வந்தார். இந்த அறிக்கையில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் இதோ :

சாலைகள், தொழிற்சாலை நெடுஞ்சாலைகள், பாரத் மாலா மற்றும் சாக்ர் மாலா ஆகிய சாலை அமைப்புக்களுக்கு நிதி உதவி

விமான கட்டுமான நிதி உதவி

விரைவில் சர்வதேச நிதிக் கட்டுப்பாட்டு மையம்

பாரத் மாலா திட்டத்தின் இரண்டாம் கட்டமாக தேசிய நெடுஞ்சாலை பணிகள் மறு சீரமைப்புக்கான உதவி

உள்நாட்டு சரக்கு போக்குவரத்துக்காக சாலை மற்றும் ரெயில் போக்குவரத்துடன் நீர் போக்கு வரத்து மேம்படுத்தல் – வாரணாசியில் இன்னும் இரு நீர் போக்குவரஹ்த்து முனையம் 2020க்குள் அமைத்தல்

பொது மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் ரெயில்வே உட்கட்டமைப்புக்கு ரூ. 50 லட்சம் கோடி முதலீடு

மின்சாரம் ஒரு நாடு ஒரே கிரிட் என்னும் நிலையில் அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணத்தல்.

பழைய மின் நிலையங்களை மூடி புதிய எரிவாயு மின் நிலையம் அமைத்தல்

வாடகை சட்டத்தில் மாறுதல். புதிய வீடுகள் அமைக்க நிலம் கையகப்படுத்தல்