வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு எதிரான கண்டன தீர்மானம், அந்நாட்டின் நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபையில் இரண்டாவது முறையாக நிறைவேறியுள்ளது.

இதன்மூலம், அவர் அடுத்தமுறை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டிரம்ப் மீதான கண்டனத் தீர்மானத்தை பிரதிநிதிகள் சபை ஏற்கனவே நிறைவேற்றியிருந்தது. அதேசமயம், டிரம்ப்பை பதவிநீக்கம் செய்ய, மேலவையின் தலைவரான துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மறுத்துவிட்ட நிலையில், மீண்டுமொருமுறை கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதிநிதிகள் சபையில், ஜனநாயக கட்சியினருக்கு வலிமை அதிகம். எனவே, தீர்மானம் எளிதாக நிறைவேறிவிட்டது. அதேசமயம், இத்தீர்மானத்தை செனட் சபையில் நிறைவேற்ற வேண்டுமெனில், குடியரசுக் கடசி உறுப்பினர்களின் ஆதரவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டனத் தீர்மானம் இரண்டாம் முறையாக பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியுள்ளதை அடுத்து, டிரம்ப்பை பதவிநீக்கம் செய்யலாமா? அல்லது அடுத்தமுறை போட்டியிடாமல் தடுக்கலாமா? என்பது குறித்த விவாதத்தை செனட் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.