டில்லி:

ச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை எதிர்ப்பது காங்கிரஸ் கட்சியின் வீண் முயற்சி என்று பாஜக கூறியிருப்பது, உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியை  பாரதியஜனதா தலைமையிலான மத்திய அரசு இயக்கி வருகிறது  என்பது தெளிவாகி உள்ளது.

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி இம்பீச்மென்ட் (Impeachment) கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் தீபக் மிஸ்ரா. இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 28ந்தேதி  சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக  பதவியேற்றார்.  அவருக்கு ஜனாதிபதி ராம்நாம் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தீபக் மிஸ்ரா மீது ஏற்கனவே பல முறைகேடுகள் செய்தாக புகார் உள்ளது. அவர் வழக்கறிஞராக 1979ல் பணியாற்றிய போது  அரசு நிலத்தை லீசுக்கு எடுத்தபோது, தனது ஜாதி குறித்து தவறான தகவல் அளித்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் அதை கட்டாக் நீதிமன்றம் ரத்தும் செய்தது. இதுகுறித்து சிபிஐ விசாரணையும் நடைபெற்றது.

மேலும், முன்னாள் அருணாச்சல பிரதேச முதல்வர் கலிக்கோ புல் தற்கொலையிலும் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பெயர் அடிபட்டது.

மேலும் சக நீதிபதிகளே உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி புகார் கொடுத்துள்ளனர். நீதித்துறையில் மத்திய அரசு தலையீடு இருப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுபோன்ற பல புகார்களுக்கு ஆளாகி உள்ள உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியை பணியிடை நீக்க காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதன் காரணமாக பாராளுமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு எதிராக இம்பீச்மென்ட் எனப்படும் கண்டனம் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது.

இதற்காக காங்கிரஸ் கட்சி  மாநில கட்சிகளையும் வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தினை துவக்கியுள்ளது.

இந்நிலையில் பாஜக பா.ஜ.க செய்தி தொடர்பாளரும், மூத்த வழக்கறிஞருமான நளின் கோஹ்லி செய்தி யாளர்களை சந்தித்தபோது,   நீதித்துறையின் செயல்பாட்டை கட்டுப்படுத்தி ஆதாயம் தேட முயற்சிக்கிறது காங்கிரஸ் என பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் சிலர் கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்து கொண்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கண்டனம் தீர்மானம் கொண்டு வந்து பதவியை பறிக்க நினைக்கும் காங்கிரஸின் முயற்சி வீணான ஒன்று எனவும், நீதித்துறையின் செயல்பாட்டை கட்டுப்படுத்தி ஆதாயம் தேட நினைக்கும் காங்கிரஸ் கனவு பலிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

மிஸ்ராவுக்கு எதிரான கண்டனம் தீர்மானம் காங்கிரஸின் வீண் முயற்சி என்றும் அவர் கூறினார்.

பாஜக செய்தி தொடர்பாளரின் பேச்சு, உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியை பாஜக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தெளிவாகி உள்ளது.

நளின் கோஹ்லியின் பேச்சு வாயிலாக, எக்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற பழிமொழிக்கேற்ப உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பின்னணியில் பாரதியஜனதா அரசு இருந்து வருவது  வெட்ட வெளிச்சமாகி உள்ளது.