சென்னை

ன்று செனையில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் வருடம் ஒரு முறை பொதுக்குழுக் கூட்டத்தையும் இரு முறை செயற்குழு கூட்டமும் கூட்ட வேண்டும் என்னும் விதியின் அடிப்படையில் இன்று சென்னை ராயப்பேட்டை ஒய் எம் சி  ஏ திடலில் திமுக பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது.   இதற்கு அக்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் தலைமை வகித்து வருகிறார்.

இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.   இவற்றில் முக்கிய தீர்மானங்கள்  பின் வருமாறு :

* இணைய தளத்தின் மூலம் திமுக உறுப்பினர்களைச் சேர்க்க விதிகளைத் திருத்தம் .
* நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வெற்றியைப் பெற்றுத் தந்த மு.க.ஸ்டாலினுக்கு  பாராட்டு  

* வரும்2020-ம் ஆண்டுக்குள் திமுக அமைப்புத் தேர்தலை நடத்துதல்

*  வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைத்தல்
* 10 ஊராட்சிகளுக்கு ஒரு ஒன்றிய கழகம் அமைப்பது
* உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிப்பது.
*  இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 வயதில் இருந்து 35 வயது வரை என நிர்ணயம்.

* மருத்துவர் அணி என்பதை மருத்துவ அணி திருத்தம்.
* திருநங்கைகளைக் கட்சி உறுப்பினர்களாகச் சேர்க்க திமுக விதிகளில் திருத்தம்.
* வெளிநாடு வாழ் இந்தியர்களை திமுகவில் சேர்க்க விதிகளில் திருத்தம் 
* ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம்.

* ஊழல் அதிமுக அரசு மீது நடவடிக்கை எடுக்காத மத்திய பாஜக அரசைக் கண்டிப்பு

* பருவ நிலை மாற்றங்கள் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
* தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்
* நாடு முழுவதும் நதி நீர் இணைப்பு திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும்

* உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்திட வேண்டும்
* அழிவு சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும்

* மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீத தமிழக இளைஞர்களை நியமித்திட வேண்டும்
என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன