புதுடெல்லி :
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா அல்லாத நோயாளிகளின் சேர்க்கை அதிகரிப்பதால், OPD சேவைகள் (புற நோயாளிகள்) இரண்டு வாரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதத்தை குறைக்க அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பாதித்த நோயாளி களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. எய்ம்ஸின் அவசர சிகிச்சை பிரிவில் கொரோனா அல்லாத ( பிற நோய்களால் பாதிக்கப்பட்ட ) நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனை அதிகாரிகள் பொது மற்றும் தனியார் வார்டுகளில் வழக்கமான OPD சேர்க்ககைளை தற்காலிகமாக 2 வாரங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளனர்.

எவ்வாறாயினும் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் பிற ஆலோசனையை பெறுவதற்கு வழக்கமான OPD ( Outpatient Department ) சேவைகள் தொடர்கின்றன. அவை சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்டதாக எய்ம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் டி.கே சர்மா கூறினார். இது தொடர்பாக நேற்று அவர் மேலும் கூறுகையில், தீவிரமான அவசர / அரை அவசர நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு கிடைக்கக் கூடிய உள்நோயாளி களுக்கான படுக்கைகளின் பயன்பாட்டை மேம்படுத்துவதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, பொது வார்டுகள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள தனியார் வார்டுகள் மற்றும் அனைத்து மையங்களுக்கும் வழக்கமான OPD சேர்க்கைகளை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் 2 வார காலத்திற்கு பின்னர் மீண்டும் பகுப்பாய்வு செய்யப்படும். அவசர நோயாளிகள், பொது வார்டுகளில் உள் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது / அவசர மற்றும் அரை அவசரகால நிலைமைகள் காரணமாக தனியார் வார்டுகளில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுவதைப் போன்ற நோயாளிகள் தொடர்ந்து அனுமதிக்கப்படுவார்கள். EHS (employees health scheme) நோயாளிகள் மருத்துவரீதியாக உத்தவாரம் அளிக்கப்பட்டபடி, தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறந்த சிகிச்சை வழங்கப்படும்.

அவசர காலத்தின் மூலம் கொரோனா அல்லாத தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் சேர்க்கை அதிகரித்ததன் அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. trauma emergency as the Trauma Centre ஒரு பிரத்யேக கொரோனா வசதியாக மாற்றப்பட்டுள்ளது. அவசர சேர்க்கைகளில் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.