சென்னை

சென்னை நகரில் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளக் காத்திருப்போருக்கு மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை நகரில் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 60 வயதை தாண்டியவர்களுக்கும் 45 வயதைத் தாண்டிய இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.  ஏப்ரல் 1 முதல் 45 வயதைத் தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடுவது தொடங்கப்பட்டது.

அப்போது முதல் டோசாக சிலருக்கு கோவிஷீல்ட் மருந்து மற்றும் சிலருக்கு கோவாக்சின் மருந்து ஆகிய இரண்டும் போடப்பட்டது.   இதில் கோவிஷீல்ட் போட்டுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் டோசுக்கான காலக் கெடு 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்கப்பட்டது.  இதைப் போல் கோவாக்சின் போட்டுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் டோசுக்கான காலக்கெடு 4 முதல் 6 வாரங்களாக நீட்டிக்கப்பட்டது.

ஆயினும் மருந்து பற்றாக்குறை காரணமாக இது தாமதம் ஆனது.  தற்போது கோவிஷீல்ட் மருந்து இரண்டாம் டோஸ் போடப்பட்டு வருகிறது.  இந்நிலையில் சென்னையில் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் டோசுக்காக காத்திருப்போருக்குச் சென்னை மாநகராட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி கோவாக்சின் இரண்டாம் டோசுக்காக காத்திருக்கும் சென்னை மக்கள் கீழ்க்கண்ட லின்க் இல் உள்ளே நுழைந்து விவரங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.  அவர்களுக்கு எப்போது எங்கு தடுப்பூசி போடப்படும் என்னும் விவரத்தை மாநகராட்சி தெரியப்படுத்த உள்ளது.

Link to register https://t.co/mS2DNwPVA8