ரோஹ்தக்

லாத்கார சாமியார் ராம் ரஹீமுக்கு பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள வழக்கின் விவரங்கள் பற்றிய செய்திக் குறிப்பு இதோ.

இந்த வழக்கு விவரம் வருமாறு :

ஏப்ரல் 2002 : அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு ராம்ரஹீமின் ஆசிரமத்தில் இருந்து ஒரு சிஷ்யை தன்னை ராம்ரஹீம் பலாத்காரம் செய்ததாக கடிதம் அனுப்பினார்.

மே 2002 : பஞ்சாப், மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் சிர்சா மாவட்ட நீதிமன்றத்துக்கு அந்த கடித்தத்தில் உள்ள புகார் குறித்து விசாரிக்க உத்தரவிட்டது.

செப்டம்பர் 2002 : உயர்நீதிமன்றம் இது குறித்து விசாரிக்க சி பி ஐ இடம் இந்த வழக்கை ஒப்புவித்தது.

டிசம்பர் 2002 : குர்மீத் ராம்ரஹீம் மீது பலாத்கார வழக்கை சிபிஐ பதிவு செய்தது.

ஜூலை 2007 : அம்பாலா நீதிமன்றத்தில் குர்மீத் ராம் ரஹீம் இருபெண்களை 1999 மற்றும் 2001 ல் பலாத்காரம் செய்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

2009 – 2010 : புகார் அளித்த இரு பெண்களும் தங்கள் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் அளித்தனர்.

ஏப்ரல் 2011 : சிபிஐ விசேஷ நீதிமன்றம் அம்பாலாவிலிருந்து பஞ்ச்குலாவுக்கு மாறியது.  ராம் ரஹிமின் வழக்கும் பஞ்ச்குலா சி பி ஐ நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

ஆகஸ்ட் 17, 2017 : வாதிகள், பிரதிவாதிகளின் வாதம் நிறைவடைந்தது.  நீதிபதி ஜக்தீப் சிங் ஆகஸ்ட் 25ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அன்றைய தினம் குர்மீத் ராம் ரஹீம் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

ஆகஸ்ட் 25, 2017 : குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.  பின்பு அவர் ரோஹ்தக் சிறையில் அடைக்கப்பட்டார்.  அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் சாமியாரின் ஆதரவாளர்களால் கலவரம் வெடித்தது.  சுமார் 38 பேர் கொல்லப்பட்டனர்.   பல இடங்களில்  ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 28, 2017 : குர்மீத் ராம் ரஹீமுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.   முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் எங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.