Random image

உச்சநீதிமன்றம் வழங்கிய 2018 ஆம் வருட பத்து முக்கிய தீர்ப்புக்கள் – 7  & 8

டில்லி

ந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய 10 முக்கிய தீர்ப்புக்களின் விவரங்கள் இதோ

சென்ற வருடம் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புக்கள் நாட்டில் பரபப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதில் 10 தீர்ப்புக்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை ஆகும். அந்த தீர்ப்புக்களில் 7 மற்றும் 8 ஆம் தீர்ப்புகளைப் பற்றி இப்போது பார்ப்போம்

7 சபரிமலைக்கு இளம்பெண்கள் செல்ல அனுமதி

நெடுங்காலமாக 10 முதல் 50 வயது வரையில் உள்ள பெண்களுக்கு கேரள மாநிலத்தில் சபரிமலையில் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.   இந்த வழக்கில் அனைத்து வயதுப் பெண்களும் அங்கு செல்லலாம் என அனுமதி வழங்கப்பட்டது.   இந்த தீர்ப்பு வழங்கிய அமர்வில் இருந்த 5 நீதிபதிபகளில் ஒரே ஒரு பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா இதற்கு எதிராக தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

8. உச்சநீதிமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்புக்கு அனுமதி

பல்வேறு மக்களும் உச்சநீதிமன்ற நிகழ்வுகள் குறித்து அறிந்துக் கொள்ளவும் நீதிமன்ற நடவடிக்கைகள் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும் இந்த தீர்ப்பு மிகவும் பயன் அளித்தது என கூறலாம்.

அடுத்த இரு தீர்ப்புகளைப் பற்றி நாளை காண்போம்