வாக்காளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

சென்னை

வாக்காளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வரும் 11 ஆம் தேதி முதல் ஆரம்பிக்க உள்ள மக்களவை தேர்தலில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் இந்த மாதம் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் அனைத்தும் மே மாதம் 23 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

நீங்கள் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க போகும் நேரத்தில் உங்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.

வாக்காளர்பட்டியலில் உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால் “சாலஞ்ச் வோட்” மூலம் நீங்கள் வாக்கு பதிய முடியும். சட்டப்பிரிவு 49ஏ வின் கீழ் உங்கள் வாக்குகளை பதிய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை அவசியத் தேவை ஆகும்.

உங்கள் வாக்கை உங்களுக்கு முன்பே வேறு யாரும் வாக்களித்திருந்தாலும் நீங்களும் வாக்களிக்கலாம். இதற்கு “டெண்டர் வோட்” என பெயராகும்.

ஒரு வாக்குச் சாவடியில் இவ்வாறு 14% க்கு மேல் டெண்டர் வாக்குகள் பதிவானால் அந்த வாக்குச் சாவடியில் சட்டப்படி மறு வககுப் பதிவு நடத்த வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள இந்த தகவல் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டு அனைத்து வலை தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

பத்திரிகை.காம் வாசகர்களும் இந்த தகவலகளை பகிர்ந்து இம்முறை அதிகபட்ச வாக்குப் பதிவு நடத்த உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.