டெல்டா சவுக்கு விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

ஜா புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த சவுக்கு விவசாயிகளுக்கு தமிழ்நாடு காகித நிறுவனம் (TNPL ) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “கஜா புயலால் சேதமடைந்து வீழ்ந்து கிடக்கும் சவுக்கு மரங்களை தமிழ்நாடு காகித நிறுவனம் கொள்முதல் செய்துகொள்ளும். நிறுவனம் சார்பாகவே வாகன ஏற்பாடும் செய்யப்படும்.

ஆகவே  தஞ்சை , நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தமிழ்நாடு காகித நிறுவனத்தின் டிவிஷனல் மேனேஜர்  சுரேஷை தொடர்புகொள்ளலாம். அவரது அலைபேசி எண்: 9442591417” – இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

டெல்டா பகுதியைச் சேர்ந்த  சவுக்கு விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவும்.