மெல்போர்ன்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், செரினா வில்லியம்ஸ், ஜப்பானின் ஒசாகா மற்றும் டென்மார்க்கின் ஓஸ்னியாக்கி போன்ற முக்கிய வீராங்கனைகள் தோல்வியடைந்துள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சீனாவின் கியாங் வாங்கிடம் மோதிய செரினா அதிர்ச்சித் தோல்வியடைந்தார். 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட செரினா, போட்டியில் தோல்வியடைந்ததானது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதேபோன்று, டென்மார்க்கின் ஓஸ்னியாக்கி, துனிசிய வீராங்கனை ஜபேயுரிடம் தோற்றுப்போனார். மேலும், ஜப்பானின் ஒசாகா, அமெரிக்காவின் சோபியா கெனினிடம் தோற்றுப்போனார்.

அதேசமயம், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிக், ஜப்பான் வீராங்கனை யோஷிஹிடோவை வென்றார்.