யப்பன் விரதம் குறித்த முக்கிய தகவல்கள்

பரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் குறித்த முக்கிய தகவல்கள்

ஐயப்பன் மலைக்குச் செல்ல மாலையிட்டு விரதம் இருக்க வேண்டியது அவசியமாகும்.   மாலை அணிந்தோர் மட்டுமே இருமுடி தாங்கி செல்ல முடியும்.   இருமுடி தாங்கி செல்வோரால் மட்டுமே ஐயனின் புனித 18 படிகளை ஏற முடியும்

விரத காலம் குறைந்தது 41 நாட்கள் அல்லது அதிகமாக 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் ஆகும்.   இந்த விரத காலத்தில் காலையும் மாலையும் கூடிய வரை வெந்நீர் பயன்படுத்தாமல் தலைக்குக் குளிக்க வேண்டும்.   அத்துடன் பூஜை அவசியம் செய்ய வேண்டும்.

உங்களால் முடிந்த அளவு இறைவனின் சுலோகங்களைச் சொல்லலாம்.   அத்துடன் ஐயப்பனின் 108 சரண கோஷங்களை அவசியம் சொல்ல வேண்டும்.

சாமியே சரணம் ஐயப்பா