இறக்குமதி மணல் விவகாரம்: தூத்துக்குடி கலெக்டர் உச்சநீதி மன்றத்தில் ஆஜர்

--

டில்லி:

தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் தொடர்பான வழக்கில், இறக்குமதி மணலுக்கான பணத்தை தமிழகஅரசு உச்சநீதி மன்றத்தில் செலுத்தியது.

மேலும், உச்சநீதி மன்ற உத்தரவுபடி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரியும் நீதின்றத்தில் ஆஜாரானார்.

மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் தனியார் நிறுவனம் 55,000 டன் மணலை இறக்குமதி செய்திருந்தது. அதை அங்கிருந்து எடுத்துச்செல்ல தமிழக அரசு அனுமதிக்கவில்லை. அது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில், ஒரு டன் 2050 ரூபாய்க்கு  வாங்க ஏற்கனவே தமிழக அரசு ஒப்புதல் அளித்திருந்தது.

எனவே இந்த மணலை வாங்கியதற்கான தொகையை நிறுவனத்திடம் ஒப்படைக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், பணம் செலுத்த தாமதமானால்,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இன்று உச்சநீதி மன்றத்தில் மணல் தொடர்பான விசாரணைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி ஆஜரானார். அப்போது, மணலுக்காக 10.56கோடி ரூபாய் தொகையை உச்சநீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

You may have missed