சென்னை:

மிழகத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சும் வாகனங்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், கவுரிவாக்கத்தில் உள்ள  விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக, நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுவதை தடுக்க கோரி, அந்த பகுதியை சேர்ந்த நாகேஸ்வர ராவ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, திபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அந்த இடத்தில் அனுமதி பெற்று நீர் எடுக்கப்படுகிறதா? என்பது குறித்தும், அவ்வாறு எடுக்கப்படுகின்ற தண்ணீர் வணிக ரீதியில் பயன்படுத்தப்படுகிறா? அல்லது சொந்த தேவைக்காக பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்தும், திங்கட்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மாவட்ட ஆட்சியரின் ஆய்வில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டால், அந்த இடத்தில் உள்ள மோட்டார்கள், தண்ணீரை கொண்டு செல்ல பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், காஞ்சிபுரம் ஆட்சியருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.