சிறிய மனிதர்களும் பெரிய பதவிகளும் : மோடி குறித்து இம்ரான் கான்

--

ஸ்லாமாபாத்

ந்தியா  -பாகிஸ்தான் இடையிலான பேச்சு வார்த்தையை மோடி ரத்து செய்ததை இம்ரான் கான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தான் உடனான அமைதிப் பேச்சு வார்த்தையை பாகிஸ்தானின் பயங்கர வாத நடவடிக்கைகளால் இந்தியா நிறுத்திக் கொண்டது.   அதன் பிறகும் பாகிஸ்தான் படையினர் தொடர்து காஷ்மீர் பகுதியில் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.   இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமரக பதவி ஏற்றார்.

இந்திய பிரதமர் மோடிக்கு அமைதிப் பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்க கோரிக்கை விடுத்து இம்ரான் கான் கடிதம் எழுதினார்.    அதை ஒட்டி வாஷிங்டனில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பேச்சு வார்த்தை நடத்த இந்தியா ஒப்புக் கொண்டது.    அதே நேரத்தில் காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மூன்று காவலர்களை கொன்றனர்.

அதை தொடர்ந்து ஒரு பாதுகப்பு படை வீரரை பாகிஸ்தான் ராணுவ்ம் கொடூரமான முறையில் கொலை செய்தது.    இவ்விரு சம்பவங்களால் அதிருப்தி அடைந்த இந்திய அமைப்புகள் இரு நாட்டு அமைச்சர்கள் சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.   அதனால் மோடி இந்த பேச்சு வார்த்தைய ரத்து செய்தார்.   இந்நிகழ்வால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்திய பிரதமரின் இவ்வித நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “எங்களின் அமைதிப் பேச்சு வார்த்தைக்கான அழைப்புக்கு இந்தியா முரட்டுத்தனமான மற்றும் எதிர்மறையான  பதில் அளித்துள்ளது.   இதனால் நான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளேன்.   எனது வாழ்நாளில் இவ்வாறு பல சிறிய மனிதர்கள் பெரிய பதவிகள் வகிப்பதை கண்டுள்ளேன்.   அந்த சிறிய மனிதர்களுக்கு தொலைநோக்கு பார்வை கிடையாது” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.