Random image

எட்டு எருமைகளை ஏலம் விட உள்ள இம்ரான்கான்

ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் வளர்த்த எட்டு எருமைகளை ஏலம் விட உள்ளதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக தற்போது பதவி ஏற்றுள்ள இம்ரான் கான் சிக்கன நடவடிக்கையில் இறங்கி உள்ளார்.   அவர் தற்போது அரசுக்கு கடன் சுமை அதிகம் உள்ளதாகவும் அதை குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்து வருகிறார்.  தற்போதைய நிலையில் பாக் அரசுக்கு சொந்தமாக சுமார் ரூ. 3000 கோடி மதிப்புள்ள நிலம் உபயோகமின்றி  உள்ளது.   அதே நேரத்தில் பாக் அரசு தினமும் கடனுக்கு ரூ.50 கோடி வட்டி செலுத்தி வருகிறது.

அரசின் சிக்கன நடவடிக்கைகள் குறித்து இம்ரான் கான், “தற்போதைய நிலையில் அரசிடம் பல தேவையற்ற சொத்துக்கள் உள்ளன.  அவைகளை விற்று கடனை அடைத்தால் எந்த நாட்டின் உதவியும் பாகிஸ்தானுக்கு தேவைப்படாது.  எனவே அரசுக்கு சொந்தமான 80 சொகுசு கார்கள் ஏலம் விடப்பட உள்ளன.  இவை அனைத்தும் முந்தைய பிரதமர்களுக்காக வாங்கப்பட்டு உபயோகப்படுத்தப் படாமல் உள்ளன.

இந்த சொகுசுக் கார்கள் ஏலத்துக்குப் பின் அரசுக்கு சொந்தமாக உள்ள 4 ஹெலிகாப்டர்கள் ஏலம் விடப்படும்.   இவையும் யாராலும் உபயோகப்படுத்தப் படாமல் உள்ளன.    அது மட்டுமின்றி முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் 8 எருமை மாடுகளை வாங்கி உள்ளார்.  பிரதமர் இல்லத்தில் உள்ள அந்த எருமை மாடுகளும் விரைவில் ஏலம் விடப்படும்.   இவைகளை வாங்க விரும்புவோர் ஏலம் கோரலாம்” என தெரிவித்துள்ளார்.

You may have missed