காஷ்மீர் பிரச்னை தீர்வுக்கு இம்ரான் கானின் புதிய திட்டம்

ஸ்லாமாபாத்

பாகிஸ்தானின் இம்ரான் கான் அரசு காஷ்மீர் பிரச்னையை தீர்க்க புதிய திட்டம் ஒன்றை அமைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

பாகிஸ்தானில் இதுவரை ராணுவ ஆட்சியே அதிக அளவில் நடந்துள்ளது.   பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுக் கொள்கை போன்ற முக்கியமான பல முடிவுகளை ராணுவம் எடுத்து வருகிறது.   தற்போது தேர்தலில் வென்று இம்ரான் கான் அரசு அமைத்துள்ள போதிலும் ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஷெரீன் மசாரி அமைச்சரவையில் முக்கிய இடம் பெற்றுள்ளார்.

அமைச்சர் ஷெரீன் மசாரி, “காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஒரு புதிய திட்டத்தி இம்ரான் கான் அரசு அமைத்துள்ளது.   சம்பந்த்தப்பட்ட சிலரிடம் இது குறித்து கருத்துக்களை கேட்ட பிறகு அந்த திட்டம் இறுதி வடிவத்தை அடையும்.   இன்னும் ஒரு வாரத்துக்குள் அந்தப் பணி நிறைவு பெறும்.

அதன் பிறகு அந்த திட்டத்தை பிரதமர் இம்ரான் கான் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அளிக்க உள்ளார்.   அமைச்சரவை இதை ஆய்ந்த பிறகு ஏதும் திருத்தங்கள் மற்றும் கருத்துக்கள் இருந்தால் அவைகளும் சேர்க்கப்படும்.   அதன் பிறகு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததும் இந்த திட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.