பதவி ஏற்பின் போது நாடாளுமன்ற ஊழியரின் கோட்டை கடனாக வாங்கி அணிந்த இம்ரான் கான்

பதவி ஏற்பின் போது பாராளுமன்ற ஊழியரிடம் கோட்டை கடனாக வாங்கி இம்ரான் கான் அணிந்த வீடியோ சமூக வளைதளங்களில் வரலாகி வருகிறது. கடந்த மாதம் பாக்கிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இம்ரான் கான் தலைமையிலான புதிய அரசு பாக்கிஸ்தானில் ஆட்சி அமைக்க உள்ளது.

imran

கடந்த மாதம் பாக்கிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானில் தெஹ்ரீக் – இ- இன்சாப் கட்சி 118 இடங்களை பிடித்து வெற்றிப்பெற்றது. இம்ரான்கான் கட்சி அதிக வாக்குகளை பெற்று முன்னணியில் இருந்தாலும் ஆட்சி அமைப்பதற்கு சிலருடன் கூட்டணி அமைக்கும் நிலைக்கு தள்ளபட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் எம்பி-யாக பதவி ஏற்றார். அப்போது எம்பி ஆவணத்தில் கையெழுத்திட்டதும், நாடாளுமன்ற உறுப்பினருக்கான அடையாள அட்டை பெறுவதற்கு புகைப்படம் எடுக்கப்பட்டது.

புகைப்படம் எடுக்கும் போது இம்ரான் கான் கோட் அணியவில்லை, நாடாளுமன்றத்திற்கு அவர் வெள்ளை நிற ஜிப்பாவை அணிந்து வந்தார். புகைப்படத்திற்கு கோட் அணிய வேண்டி இருந்ததால், சற்றும் யோசிக்காமல் நாடாளுமன்றத்தில் இருந்த ஊழியர் ஒருவரின் கோட்டை கழட்டி வாங்கி, அதனை அணிந்து கொண்டு இம்ரான் கான் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இம்ரான் கான் நாடாளுமன்ற ஊழியரின் கோட்டை கடனாக வாங்கி அணிந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இம்ரான் கானில் இந்த செயல் நெட்டிசன்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து சிறிய கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் பாக்கிஸ்தான் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இம்மாதம் 18ம் தேதி அவர் பிரதமராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி