Random image

பாகிஸ்தான் ராணுவ கட்டுப்பாட்டில் இம்ரான் கான்?….மத்திய அமைச்சர் வி..கே.சிங்

டில்லி:

பாகிஸ்தான் ராணுவ கட்டுப்பாட்டில் இம்ரான் கான் இருக்கிறாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று மத்திய அமைச்சர வி.கே.சிங் கூறினார்.

பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் எல்லையில் ஊடுருவல் குறித்து மத்திய வெளிவிவகார துறை இணை அமைச்சர் வி.கே. சிங்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர் கூறுகையில்,‘‘நீங்கள் அனைவரும் மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்களா? என்பது எனக்கு தெரியாது. ஆனால், அந்த நபருக்கு (இம்ரான்கான்) ராணுவம் (பாகிஸ்தான்) ஆதரவு அளித்து வருகிறது. அங்கு ராணுவமே இன்னும் ஆட்சி செய்கிறது.

அதனால், அந்த நபர் தொடர்ந்து ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறாரா? அல்லது இல்லையா? என்பபதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். என்ன நடக்கிறது என்பதும் கண்காணிக்கப்படும்’’ என்றார். இவ்வாறு அவர் கூறிய போது இம்ரான் கான் பெயரை குறிப்பிடவில்லை.

பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் முயற்சிகள் எதுவும் மேற்கொண்டதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ‘‘இந்தியாவின் கொள்கை மிக தெளிவாக உள்ளது. அதற்கான சூழ்நிலை பலனளிக்கும் வகையில் இருக்குபோது பேச்சுவார்த்தை நடக்கும்’’ என்றார்.