பாகிஸ்தான் 22 ஆவது பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்பு

ஸ்லாமாபாத்

ன்று பாகிஸ்தான் நாட்டின் 22 ஆம் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவி ஏற்றுக் கொண்டார்.

கடந்த மாதம் 25 ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டி; பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடந்தது.  இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் பிடிஐ கட்சி 116 இடங்களுடன் அதிக இடம் பெற்ற தனிக்கட்சியாக இருந்தது.   ஷா நவாசின் கட்சி 64 இடங்களை பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தது.

சிறிய கட்சிகள், சுயேச்சைகள் மற்றும் சில நியமன உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இம்ரான் கான் முயன்றார்.  அதை ஒட்டி இம்ரான் கான் பிரதமராக 176 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு  அளித்தனர்.

மொத்தம் 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவையான நிலையில் இம்ரான் கானுக்கு 176 உறுப்பினர்கள் ஆதரவு கிடைத்ததால்  அவர் இன்று பிரதமாரக பதவி ஏற்றுக் கொண்டார்.   ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றம் நடைபெறுவது பாகிஸ்தான் வரலாற்றில் இரண்டாம் முறை ஆகும்.