இஸ்லாமாபாத்: இந்திய கிரிக்கெட் வாரிய சின்னம் இடம்பெற்ற ராணுவத் தொப்பி அணிந்த இந்திய வீரர்களுக்கு பதிலடி தரும் வகையில் செயல்படக்கூடாது என்று தனது நாட்டு அணியினருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.

இந்தவகையில் அவர் மற்றுமொரு முறை முதிர்ச்சியுடன் செயல்பட்டிருக்கிறார் என்று பாராட்டப்படுகிறார்.

புலவாமாவில் மத்திய துணை ராணுவப் படைகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நினைவுகூரும் வகையில், மார்ச் மாதம் ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் ராணுவத் தொப்பி அணிந்தனர்.

ஜுன் மாதம் 16ம் தேதி உலகக்கோப்பையில் இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நடைபெறவுள்ளது. அப்போட்டியில், இந்திய வீரர்களுக்கு பதிலடி தரும் வகையிலான செயல் எதையும் மேற்கொள்ளக்கூடாது என்று தனது நாட்டு அணியினரைக் கண்டித்துள்ளார் இம்ரான் கான்.

மேலும், விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய அணியின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.