இந்திய உறவை மேம்படுத்துவேன் : இம்ரான் கான்

ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ள இம்ரான்கன் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்புவதாக கூறி உள்ளார்.

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டு இருக்கின்றன.   இதில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரிக் இன்சாப் கட்சி 76 இடங்களில் வென்று 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது.   நவாஸ் ஷெரிஃப் கட்சி 43 இடங்களில் வென்று 20 இடங்களில் முன்னிலையில் உள்ளது.  ஆசிப் அலி ஜர்தாரியின் கட்சி 18 இடங்களில் வென்று 19 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பாகிஸ்தான் பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் இம்ரான் கான் செய்தியாளர்களிடம், “நான் பாகிஸ்தான் அரசியலில் கடந்த 22 ஆண்டுகள் போரடியதன் பலனை கடவுள் இப்போது அளித்துள்ளார்.    நான் ஏற்கனவே பல முறை இந்தியாவுக்கு கிரிக்கெட் காரணமாக பயணித்துள்ளேன்.   எனக்கு அங்கு பலரை தெரியும்.   நான் இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்த விரும்புகிறேன்.   இதற்கு இந்தியா ஓரடி முன் வந்தால் பாகிஸ்தான் இரண்டடி முன் வரும்.

நான் ஆட்சிக்கு வந்தால் இந்திய உறவு சீர்கெடும் என்பதும் என்னை ஒரு பாலிவுட் வில்லன் போல ஊடகங்கள் சித்தரிப்பதும் தவறானது.    இருநாடுகளுக்கு இடையே உள்ள முக்கிய பிரச்னையான காஷ்மீர் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டு அங்கு நடக்கும் மனித உரிமை மீரல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.  அங்கு நடக்கும் எல்லா விவகாரங்களுக்கும் பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும்.” என கூறி உள்ளார்/