புதுடெல்லி:

புல்வாமா தாக்குதலுக்குப் பிந்தைய நடவடிக்கையை பிரதமர் மோடியின் வெற்றியாக பாஜக பேசத் தொடங்கியுள்ளனர். ஆனால், உண்மையிலேயே இதில் அவுட் ஆகாத பேட்ஸ்மேன் இம்ரான் கான்தான் என ‘தி பிரிண்ட்’ இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:

புல்வாமாவில் நடந்த ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் கொடூரத் தாக்குதலுக்குப் பின், இந்தியா விமானத் தாக்குதல் நடத்தியது.
அதன்பின்னர் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கினார்.

பின்னர் போர் அரசியல் சற்று திசை மாறிப் போய்விட்டது. அபினந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.

இது பிரதமர் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோரது வலுவான கொள்கைக்கு கிடைத்த வெற்றி என பாஜகவினர் கொண்டாடினர்.

சமாதானத்துக்கு சமிக்ஞை தரும் வகையில்,அபினந்தனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுதலை செய்தார்.
அதேசமயம் பேச்சுவார்த்தையை தொடங்குமாறும் இந்தியாவை கேட்டுக் கொண்டார்.

ஆனால், மக்களவை தேர்தலுக்கு முன்பாக இரு நாடுகளுக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்காது என்றே தெரிகிறது.
அதேசமயம் பாஜகவின் கருத்தான, தீவிரவாதத்துக்கு உதவுவதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச வேண்டும் என்ற வாதமும் சரியானதே.

புதிதாக அமையப் போகும் அரசே விவேகமுள்ள இம்ரான் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தும். கிரிக்கெட்டில் அவர் காட்டிய சிறப்பியல்புகள், இந்த பேச்சுவார்த்தையிலும் எதிரொலிக்கும் என நம்பலாம்.

அபினந்தனை விடுவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் செயல் சர்வதேச அளவில் ராஜதந்திர நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

அதேசமயம்,இந்த பிரச்சினையை மோடி அரசு ஆக்ரோஷத்துடன் அணுகியுள்ளது. இம்ரான் கான் போல் புத்திசாலித்தனமாக அணுகியிருக்க வேண்டும்.

மக்களவை தேர்தலில் வெல்வதற்காக புல்வாமா தாக்குதலை பயன்படுத்த மோடி நினைத்தார். ஆனால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை அதிகாரி அபினந்தனை விடுதலை செய்வதாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த யூரி தாக்குதலுக்குப் பிறகு, தீவிரவாத பிரச்சினையை அரசியல் ரீதியாகவும், உணர்ச்சிப்பூர்மாகவும் பிரதமர் மோடி அணுகி வருகிறார்.

திய&பாகிஸ்தான் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அதன்பின்னர், புல்வாமா கார் குண்டு தாக்குலுக்கு பாகிஸ்தானிலிருந்து இயங்கும் ஜெய்சி இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றதும்,மோடியின் நிலையை இக்கட்டானது.

பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாத முகாம்களின் தாக்கிய பின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நடவடிக்கையை ராஜதந்திர ரீதியிலேயே உலக நாடுகள் கவனிக்கத் தொடங்கியுள்ளன.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் விக்கெட்டை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் வீழ்த்திவிட்டதாகவே தெரிகிறது.

இவ்வாறு ‘தி பிரிண்ட்’ இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.