மட்டைப்பந்தில் இருந்து மந்திரி சபை வரை : இம்ரான் கான் அரசியல் பயணம்

ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் அரசியல் பயண விவரம் இதோ

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த இம்ரான் கான் கடந்த 1982-83ல்  இந்தியாவை 3-0 என்னும் கணக்கில் தோற்கடித்தவர்.    அவருடைய தலைமையின் கீழ் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவை பாக் அணி வென்றுள்ளது.  அவருடைய அணித் தேர்வு எப்போதுமே வெற்றியை நோக்கி இருக்கும் என அப்போது பேசப்பட்டது.  ஆனால் அரசியலைப் பொறுத்த வரை அவர் ஒருவர் மட்டுமே தலைவராக இருந்தார்.

கடந்த 1996 ஆம் வருடம் அரசியலில் இம்ரான் கான் நுழைந்தார்.   அப்போது அவருடைய சர்வதேச கிரிக்கெட் சகாக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.   அரசியல் சுழல் அவரை விழுங்கி விடும் என அவர்ருடைய நண்பர்களும் விசிறிகளும் பயமுறுத்தினர்.   ஆயினும் அவர் தனதுபணியம் தொடர்ந்தார்.   கடந்த 20002 ஆம் வருட பொதுத் தேர்தலில் அவர் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றார்.  அவருக்கு பின்புலமாக இருந்த அனைவரும் இதற்கு பின் அவரை விட்டு விலகி விட்டனர்.

ஆயினும் இம்ரான் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். அமெரிக்க எதிர்ப்பு, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை வைத்து சிறிது சிறிதாக அரசியலில் கால் ஊன்ற தொடங்கினார்.    இளைஞர்களின் ஆதரவு அவருக்கு பெருக தொடங்கியது.    அத்துடன் நாட்டை எப்போதும் ஆட்டிப்படைத்து வரும் பாக் ராணுவம் அவருக்கு ஆதரவு அளிக்கத் தொடங்கியது.

இம்ரான் கான் பாகிஸ்தான் ராணுவத்தின் கைப்பொம்மை என பலரும் தெரிவித்துள்ளன்ர்.   அத்துடன் பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ எஸ் ஐ அவருக்கு மிகவும் உதவியது என்பதும் உலகறிந்ததே.   இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டது, அரசியல் நோக்கர்கள் இம்ரான் கட்சிக்கும் நவாஸ் கட்சிக்குமிடையில் கடும் போட்டி நிலவும் எனவும் ஆட்சியை தீர்மானிப்பது பாகிஸ்தான் மக்கள் கட்சியாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் தற்போது வெளிவரும் தேர்தல் முடிவுகள் இந்த கருத்தை பொய்யாக்கி உள்ளது.   இம்ரான் கானுக்கும் பிரதமர் நாற்காலிக்குமான இடைவெளி குறைந்துக் கொண்டே வருகிறது.   விரைவில் மட்டைப்பந்து வீரரான இம்ரான் கான் மந்திரி சபை அமைப்பார் என அரசியல் நோக்கர்கள் தற்போது தங்கள் கருத்தை மாற்றி உள்ளனர்.