உலகக் கோப்பை தொடர் முடிந்த நிலையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்ரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார்.

imran

39 வயதாகும் தென் ஆப்ரிக்க வீரர் இம்ரான் தாஹிர் 2011ம் ஆண்டு முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறார். அதிலிருந்து முன்னணி வீரராக திகழ்ந்து வரும் இம்ரான் தாஹிர் தற்போது இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் சர்வதேச இருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக இம்ரான் தாஹிர் அறிவித்துள்ளார். இதுவரை 95 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இம்ரான் தாஹிர் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி, 3 முறை ஒரே போட்டியில் ஐந்து விக்கெட்டுகளையும், 6 முறை 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.