பாகிஸ்தான் அதிபர் தேர்தலுக்கு இம்ரான் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் அதிபராக பதவி வகிக்கும் மம்னூன் ஹுசைனின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் செப்டம்பர் 9-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் செப்டம்பர் 4-ம் தேதி அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் வரும் 27-ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். வேட்பாளர் இறுதிப்பட்டியல் 30-ம் தேதி வெளியாகும். இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஆளும்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் டாக்டர் ஆரிப் ஆல்வி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இம்ரான் கான் அந்நாட்டின் 22-வது பிரதமராக இன்று பதவியேற்றார். அடுத்த சில நிமிடங்களுக்கு அதிபர் வேட்பாளர் பெயர் அதிகாரப்பூர்வ வெளியிடப்பட்டது.

பல் டாக்டரான ஆரிப் ஆல்வி (69) இம்ரான் கான் கட்சியின் தொடக்கக்கால தலைவர்களில் ஒருவர். 2006&-2013 காலகட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்த இவர் கராச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published.